திண்டிவனத்தில் பள்ளி மாணவ மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திண்டிவனம் அரசு உதவிபெறும் பள்ளி நேஷனல் மேல்நிலைப்பள்ளி.
இப்பள்ளி மாணவ மாணவிகள் நேற்று டெங்கு விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
காந்தி சிலை அருகே தொடங்கிய டெங்கு விழிப்புணர்வு பேரணியை திண்டிவனம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி முருங்கபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் காந்திசிலை வந்து முடிவடைந்தது. பேரணியில் டெங்கு கொசு ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் மற்றும் ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.