முதல்வர் இ.பி.எஸ். அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் அன்றாட பேச்சுகள் தமிழக அரசியலில் நாள்தோறும் வானவேடிக்கையாக பட்டையை கிளப்பி வருகிறது. ஆளும்கட்சிக்கு எதிரான தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பினரிடம் இருந்து வரும் புகார் கணைகளையும் புஸ்வாணமாக்குவதில் அமைச்சர்களின் பாணி அதிரடி ரகம். அதிலும் செய்தி மற்றும் விளம்பரம் திரைப்படத் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் ஆவேசம், திரையுலகைச் சேர்ந்த உச்சபட்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரையும் கிழித்து தொங்கவிடுவதுதான் தமிழக அரசியலில் ஹாட் நியூஸ்.
அ.தி.மு.க.வினரால் நெகிழ்ச்சியுடன் அம்மா என்று அழைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் மட்டுமே, அ.தி.மு.க.வுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பது வாடிக்கை. ஆனால், 2016ல் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, அ.தி.மு.க. பலவீனமாகிவிட்டது என்ற கணக்கில், தமிழகத்தில் உள்ள பிரபல எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல திரையுலகைச் சேர்ந்த வண்டு சில்லுகள் கூட ஆளும்கட்சிக்கு எதிராகவும், அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் அக்னி குழம்புகளை வீசி வருகின்றனர். அதுவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வலை வீசிய கதையாக மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் உள்பட புதிதாக அரசியல் அரிதாரம் பேசியவர்கள் எல்லாம் சகட்டு மேனிக்கு முதல்வர் இ.பி.எஸ்.ஸையும், ஆளும்கட்சியான அ.தி.மு.க.¬வுயம் வசை பாடினார்கள். இவர்களின் சத்தம் ஊசிப்பட்டாசு போல சத்தம் எழுப்பிய அதேவேளையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் விமர்சனமும் லட்சுமி வெடி போல, தமிழக அரசியலை சூடாக்கியாது.
பல்முனை தாக்குதலால் அ.தி.மு.க. அமைச்சர்கள் நிலைகுலைந்து போய்விடுவார்கள் என எதிர்க்கட்சியினர் பகல் கனவில் மூழ்கிய நேரத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர், தங்களுக்குரிய சாணக்கியத்தனத்துடன் பதிலடிகளை கொடுத்து, அதிரடி அரசியலுக்கு பயப்படாத ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுவும், நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் ஒன்றிணைந்து, தமிழக மக்களுக்கு நல்லது என்றால் தாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என அ.தி.மு.க ஆட்சிக்கு பூச்சாண்டி காட்டினார்கள். இதை விடவும் ஒருபடி மேலே சென்று தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழும்பி வம்புக்கு இழுப்பதைப் போல, முதல்வர் இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை கிண்டலடித்ததுடன், இ.பி.எஸ். முதல்வரானதே அதிசயம் என்ற ரஜினியின் நக்கல் பேச்சு, அ.தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர்களையும் கொந்தளிக்க வைத்துவிட்டது. அவர்களின் கோபத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாக பிரதிபலிக்கும் வகையில், ரஜினியும், கமலும் ஒருபோதும் எம்.ஜி.ஆரைப் போல, ஜெயலலிதாவைப் போல அரசியல் உலகில் உச்சத்தை தொட முடியாது. அவர்களின் முதல்வர் கனவு ஒருகாலத்திலும் நிறைவேறாது என ஆவேசத்துடன் பதிலடி கொடுத்து பட்டையை கிளம்பிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. அவரின் இந்தப் பேச்சு, அடிமட்ட அ.தி.மு.க. தொண்டர்களிடமும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வை கிள்ளுக்கீரையாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சுடச்சுட பதிலடி கொடுக்கும் அமைச்சர்களின் அதகள பாலிடிக்ஸை அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல, அரசியல் ஆய்வாளர்களும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குறிப்பிட்ட அளவுக்கு ரசிகர்களாக வைத்திருக்கும் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரையே துவைத்து தொங்கவிடுகிறார்களே அ.தி.மு.க.வை கிள்ளுக்கீரையாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சுடச்சுட பதிலடி கொடுக்கும் அமைச்சர்களின் அதகள பாலிடிக்ஸை அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல, அரசியல் ஆய்வாளர்களும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குறிப்பிட்ட அளவுக்கு ரசிகர்களாக வைத்திருக்கும் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரையே துவைத்து தொங்கவிடுகிறார்களே---...அ.தி.மு.க.வுக்கு எதிராக பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்படதா..என அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நெருக்கமான தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகியிடம் கேட்டோம். தனது பெயரையோ, புகைப்படத்தையோ பிரசுரிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் அரசியல் சாணக்யதனத்தை சிலாகித்து விவரித்தார்.
"செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, பழுத்த அரசியல்வாதி. மறைந்த மாபெரும் தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் பள்ளியில் படித்த அனுபவமிக்க தலைவர். தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றாலும் தமிழகம் முழுவதும் பிரபலமானவர். தொடக்க காலம் முதலே அதிரடியை விரும்பாதவர் அமைச்சர் என்றாலும், அ.தி.மு.க மீதான விசுவாசத்தில் அமைச்சரின் அளப்பரிய உள்ளுணர்வை யாரும் சந்தேகம் கொள்ள முடியாது. கடம்பூர் ராஜுவின் விசுவாசத்தையும், அம்மா மீதான வெறித்தனமான பக்தியையும் உணர்ந்துதான், 2011 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அவரை நிறுத்தினார் புரட்சித்தலைவி அம்மா. எம்.எல்.ஏ.வாக இருந்த ஐந்தாண்டுகளிலும் தொகுதி முழுவதும் அரசு நலத்திட்ட உதவிகளை விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கியதுடன், அ.தி.மு.க. தொண்டர்களின் இன்ப,துன்பங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார். ஆளும்கட்சி எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு வம்பு தும்புகளில் தலைகாட்டாமல், அம்மாவின் உண்மை விசுவாசியாக கடம்பூர் ராஜு, அ.தி.மு.க.வுக்கும், அம்மாவுக்கும் பெரும் புகழ் சேர்ந்தார். அதற்கான பரிசாக, மீண்டும் 2016ல் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதுடன் மட்டுமின்றி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பதவியையும் வழங்கி அழகுப் பார்த்தார் புரட்சித்தலைவி. அமைச்சர் பதவியேற்றவுடன், தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர் கடம்பூர் ராஜு. அதுவும் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை, அம்மாவின் அளப்பறிய திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டும் செல்வதில், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தவர் அமைச்சர். அம்மாவின் மறைவுக்குப் பிறகு கொண்ட கொள்கையில் சிறிய அளவில் கூட தடுமாறாமல், முதல்வர் இ.பி.எஸ். தலைமையை ஏற்றுக் கொண்டு திறம்பட செயலாற்றி வருகிறார்.
அவரின் அரசியல் சாணக்யத்தனத்திற்கு அண்மையில் நடந்த நாங்குனேரி இடைத்தேர்தல் வெற்றி மிகப்பெரிய அங்கீகாரம் என்றே சொல்லலாம். காங்கிரஸ் ஆளுமை கொண்ட தொகுதியில், தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும் முறியடித்து அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது என்றால், அதற்கான உழைப்பில் கடம்பூர் ராஜுவின் கடுமையான உழைப்பு பெரும்பங்கு வகித்தது. கீழ்மட்டம் முதல் மேல் மட்டம் வரை சாதூர்யமாக அரசியல் காய்களை நகர்த்தி வரும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு, தனது சொந்தமாவட்டத்திலேயே ஏராளமான எதிரிகள் உள்ளார்கள். அவர்களின் சித்து விளையாட்டுகளையும், சிறுபிள்ளைத்தனமான செயல்களையும் தவிடுபொடியாக்கி, தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் அசைக்க முடியாத சக்தியாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் அமைச்சர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அரசியல் பாடம் கற்ற அவர், ரஜினியும், கமலும் பொறுப்பற்ற முறையில் அ.தி.மு.க. ஆட்சி மீது விமர்சனங்களை வீசினால் பார்த்துக் கொண்டு சும்மா வேடிக்கை பார்ப்பாரா என்ன. ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கம் அ.தி.மு.க. உட்கட்சிக்குள் ஒருவர் மீது ஒருவருக்கு கருத்து வேறுபாடு இருக்கும். ஆனால், நாள் தவறாமல் பொதுமக்களை, கட்சியினரை, அரசு அலுவலர்களை சந்தித்து பல்வேறு பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காணும் வல்லமைக் கொண்டவர் என்பதாலும், தமிழக அரசியலின் நாடித் துடிப்பை உணர்ந்தவர் என்பதாலும் தான் ரஜினியையும், கமல்ஹாசனையும் சுடச்சுட வறுத்தெடுக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. கிராம அளவில் கட்சி கிளைகளைக் கூட துவக்காத ரஜினியும், கமல்ஹாசனும் 2021ல் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றி விடுவோம் என பிதற்றினால், அதை கேட்டு சும்மா இருப்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு ஒன்றும் சோளக்காட்டு பொம்மையில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் போல இன்னொரு தலைவர் பிறக்க முடியாது. அதுவும் திரையுலக புகழை மட்டுமே வைத்துக் கொண்டு தமிழகத்தின் முதல்வராக ஆகி விடுவோம் என பகல் கனவு காணும் ரஜினி, கமல் ஆகியோரின் பருப்பு ஒரு நாளும் தமிழக அரசியலில் வேகாது என காட்டமாக பேசி வருகிறார் அமைச்சர். ஆளும்கட்சியான அ.தி.மு.க.வின் வீரமிக்க தளபதிகளில் அவரும் ஒருவர். இதற்கு பிறகும் அமைதி காக்காமல் அ.தி.மு.க. ஆட்சியை ரஜினியும், கமலும் விமர்சனம் செய்தால், அமைச்சரின் பதிலடி வேறு லெவலுக்கு சென்றாலும் அதிர்ச்சியடைய தேவையில்லை. அன்றாட அரசியலில் மட்டுமல்ல, ஆட்சிப் பணியிலும் அமைச்சர் செம ஸ்பீடுதான். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த 6 ஆண்டு கால ஆட்சி சாதனைகள் மட்டுமல்ல, முதல்வர் இ.பி.எஸ். ஆட்சியின் சாதனைகளும் இன்று கிராம அளவில் மக்களை விரைவாக சென்றடைந்திருக்கிறது என்றால், அதற்கு அமைச்சரின் மதிநுட்பமும், அரசுப் பணியை துரிதப்படுத்துவதில் அவர் காட்டும் வியூகமும் தான் முக்கிய காரணம். மறைந்த முதல்வர் அம்மாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், மாநிலம் முழுவதும் ஜெயலலிதா பெயரில் திரையரங்குகளை அமைக்கும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளார். அதுபோலேவே மறைந்த தலைவர்களுக்கு மணிமண்டபம் அ¬ம்பபதாக இருக்கட்டும், சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த தலைவர்களுக்கு அரசு சார்பில் திருவுருச் சிலை அமைப்பதாகட்டும், மரியாதை செய்வதாகட்டும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னூதாரணமாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. மடியில் கனமில்லை..வழியில் பயமில்லை என்று துணிச்சலாக பயணம் செய்து கொண்டிருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு, அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார். அதட்டல், மிரட்டல் எல்லாம் அவருக்கு தூத்துக்குடி உப்பு போல.. சில வினாடிகளில் கரைத்துவிடுவார்.
தமிழகத்தில் ரஜினி-கமல் அரசியல் எடுபடாது அமைச்சர் கடம்பூர் ராஜு கல..கல...