ஊருக்குப் போக சிறப்பு பேருந்துகள் ரெடி... பொங்கலுக்கு பண்டிகை கால கூடுதல் பேருந்துகள் எத்தனை தெரியுமா

29 ஆயிரத்து 213 பேருந்துகள் மாநிலம் முழுக்க இயக்கப்படவிருக்கின்றன. சென்னையிலிருந்து மட்டும் சுமார் 4950 பேருந்துகள் இயக்கப்படும்


பண்டிகையை ஒட்டி, பண்டிகை காலச் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.


பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு பல்வேறு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கபப்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 29 ஆயிரத்து 213 பேருந்துகள் மாநிலம் முழுக்க இயக்கப்படவிருக்கின்றன. சென்னையிலிருந்து மட்டும் சுமார் 4950 பேருந்துகள் இயக்கப்படும்.

ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை மாநிலம் முழுக்க கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகைக் காலப் பேருந்து சேவை ஜனவரி 12ஆம் தேதி முதல் தொடங்குகிறது.


Popular posts
திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
Image
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மக்களிடம் "பிராங்க்" செய்ய வேண்டும் என்பதற்காக செய்ததற்காகச் செய்த
காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்
Image
விழுப்புரம். ஏப், 13 மாவட்ட காவல்துறை எஸ்பி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகரத்திற்குள் வரவேண்டும்,
Image
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாஎதிரொலி கமல் நாத் ஆட்சி கவிழ்கிறது
Image